உர்ஜித் படேல் தலைமையில் நவ. 19-ம் தேதி மத்தியக் குழு கூட்டம்

மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் வரும் 19-ம் தேதி மத்தியக் குழு கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா மத்திய வங்கிகளின் தன்னாட்சி நிர்வாகம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து, மத்திய நிதியமைச்சகம் மற்றும் ஆர்.பி.ஐ இடையே மோதல் உருவாக தொடங்கியது. இதைத்தொடர்ந்து, ஆர்.பி.ஐ சட்டப் பிரிவு 7-ன் படி ஆர்.பி.ஐ-உடன் நிதியமைச்சகம் ஆலோசனை நடத்த தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதற்கிடையில், ஆர்.பி.ஐ கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், ஆர்.பி.ஐ கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில், ஆர்.பி.ஐ மத்தியக் குழு வரும் நவம்பர் 19-ம் தேதி மும்பையில் கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில் வழக்கத்துக்கு மாறாக சற்று முன்கூட்டியே நடைபெறவுள்ள இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Exit mobile version