நவம்பர் 11ம் தேதி பாரிசில் புதினை, டிரம்ப் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி முதலாம் உலக போர் நடைபெற்றது. இந்த போரின் நூற்றாண்டு நினைவு தினம் அடுத்த மாதம் ரஷியாவில் அனுசரிக்கப்பட உள்ளது. இதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு ரஷியா அதிபர் விளாடிமிர் புதின், அதிபர் டிரம்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் மாஸ்கோ செல்கிறார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.