தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருதை இந்தியா டுடே நிறுவனம் வழங்கியது.
டெல்லியில் இந்தியா டுடே நிறுவனம் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சூற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டு சிறந்த மாநிலத்திற்கான விருதையும், சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்கியதற்கான விருதையும் தமிழகத்திற்கு வழங்கினார். தமிழகத்தின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று விருதுகளை பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகம் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குவதாக கூறினார்.