நாமக்கல்லில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குழந்தை வியாபாரம் செய்பவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
ராசிபுரத்தில் குழந்தைகளை எடைபோட்டு, நிறம் பார்த்து குழந்தைகளை, பிறப்பு சான்றிதழுடன் பத்திரப்பதிவு செய்து விற்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டத்திற்கு புறம்பாக, ஏழை குழந்தைகள், தவறான நடத்தையால் பிறக்கும் குழந்தைகளை, இடைத்தரகர்கள் வாங்கி, விலைக்கு விற்பது நடந்து வருகிறது. ராசிபுரத்தில், ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் தரகராக இருந்து குழந்தைகளை வாங்கி, விற்று வருவதாக கூறப்படுகிறது. குழந்தையின் நிறம், எடை, அழகை பொருத்து விலை நிர்ணயிக்கப்படும் என்று அவர் பேசும் செல்போன் ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.