பெருந்தலைவர் காமராஜரின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காமராஜரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செய்தனர்.