ஏப்ரல் 5ம் தேதி வரை சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை புறநகர் ரயில் சேவையில் ஏப்ரல் 5ம் தேதி வரை இரவு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை – கடற்கரையில் இரவு 8.28 மற்றும் இரவு 9.39 மணிக்கு புறப்படும், சென்னை கடற்கரை – தாம்பரம் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாம்பரத்தில் இரவு 10.05மற்றும் 10.45 மணிக்கு புறப்படும், தாம்பரம் – சென்னை கடற்கரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை- கடற்கரையில் இரவு 11.05மணிக்கும் இரவு 11.30 மணிக்கும் மற்றும் இரவு 11.59 மணிக்கும் புறப்படும், சென்னை கடற்கரை – தாம்பரம் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், செங்கல்பட்டில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்படும், செங்கல்பட்டு – சென்னை -கடற்கரை புறநகர் ரயில், தாம்பரம் – கடற்கரை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து இரவு 10:30க்கு புறப்படும், தாம்பரம் – சென்னை கடற்கரை புறநகர் ரயில், பூங்கா – கடற்கரை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இருந்து இரவு 11:10க்கு புறப்படும், செங்கல்பட்டு – சென்னை-கடற்கரை புறநகர் ரயில், எழும்பூர் – கடற்கரை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version