ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டன!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கி உலகில் பல்வேறு நாடுகளுக்கு பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் காராணமாக, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், 2021 ஆம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை, இப்போட்டிகள் நடைபெறும் என ஒலிம்பிக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதேபோல், பாரா ஒலிம்பிக் போட்டிகளும் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி துவங்கி, செப்டம்பர் ஐந்தாம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் தாமஸ் பேக் , டோக்கியோ ஏற்பாட்டு குழுத்தலைவர் மோரி யோஷிரோ, டோக்யோ ஆளுநர் கொய்கே யூரிகோ மற்றும் பாரா ஒலிம்பிக் அமைச்சர் ஹஷிமோத்தோ சீய்க்கோ ஆகியோர், தொலைபேசி வாயிலாக கலந்துரையாடி, புதிய தேதிகளை முடிவு செய்தனர்.

 

Exit mobile version