ஒலிம்பிக் ஹாக்கி பயிற்சி போட்டி: இறுதிச்சுற்றுக்கு இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் தகுதி

ஒலிம்பிக் ஹாக்கி பயிற்சி போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய மகளிர் மற்றும் ஆண்கள் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் ஹாக்கி போட்டிக்கு தயாராகும் வகையில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மகளிர் பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்தியா- சீனா இடையே நேற்று நடந்த கடைசி ஆட்டம் டிராவில் முடிந்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இதேபோல், ஆஸ்திரேலியா – ஜப்பான் அணிகள் மோதிய ஆட்டமும் டிரா ஆனது. இன்று நடைபெறும் மகளிருக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. ஆண்கள் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் மன்தீப் சிங்கின் அபார ஆட்டத்தால் 6-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் தொடர்ந்து மூன்று கோல்கள் அடித்து மன்தீப் சிங் சாதனை படைத்தார். புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்த இந்தியா, இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்துடன் விளையாடுகிறது.

Exit mobile version