புதையலை எதிர்பார்த்து பழங்கால இரும்பு பெட்டியை உடைத்தவர்கள் ஏமாந்துபோன சுவாரஸ்ய சம்பவம் குடியாத்தத்தில் நிகழ்ந்துள்ளது. தங்கம், வெள்ளி என்று ஏக பில்டப் கொடுக்கப்பட்ட நிலையில் பெட்டிக்குள் இருந்ததுதான் என்ன? வாருங்கள் பார்ப்போம்…
புதையல் இருப்பதாகக் கருதி ஒரு மாசம் கழிச்சி உடைக்கப்பட்ட பழையகால இரும்புப் பெட்டியில இருந்ததெல்லாம் இந்த சுதேசமித்திரன் நாளிதழும், ஓரிரண்டு சில்லறை நாணயங்களும்தான்…
வேலூர் மாவட்டம் குடியாத்தத்துல கடந்த ஆகஸ்ட் மாசம், பழைய இரும்புப் பெட்டியில புதையல் இருக்கிறதா தகவல் பரவி எல்லாரையும் பரபரப்பாக்குச்சு. சந்தைப்பேட்டைய சேர்ந்த முகமது இம்தியாஸ், தன்கிட்ட 25 வருஷமா இருந்த ஆயிரம் கிலோ எடை கொண்ட இரும்பு பெட்டிய குடியாத்தம் மசூதிக்கு கொடுக்கிறதுக்காக கொண்டு வந்தாரு… அந்த பழைய இரும்பு பெட்டிதான் பரபரப்ப ஏற்படுத்திச்சு… அந்த பெட்டியில தங்க நகை இருக்கலாம்.. வெள்ளி நகை இருக்கலாம்னுலாம் ஏகத்துக்கும் புதையல் தகவல் காட்டுத்தீயாய் பரவ, குடியாத்தம் போலீசாரும், வருவாய் கோட்டாட்சியரும் அங்க வந்து அந்த பெட்டிய உடைக்க முயற்சி எடுத்தாங்க.
ரொம்பப் போராடியும் அவங்களால பெட்டிய உடைக்க முடியாததால ஒருகட்டத்துல, ஜே.சி.பி எந்திரம் மூலமா அந்த பெட்டிய கொண்டு போய் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்துல ஒரு அறையில வச்சி, சீல் வச்சிட்டாங்க.
கிட்டத்தட்ட ஒரு மாசமா புதையல காத்த பூதம் மாதிரி அந்த இரும்பு பெட்டி இருந்த அறைய பாதுகாப்பா பாத்துக்கிட்டு இருந்தாங்க. இந்த நிலையில அந்தப் பெட்டிய உடைக்கணும்னு முடிவு பண்ணி திங்கட்கிழமை, குடியாத்தம் வட்டாட்சியர் மற்றும் போலீஸ்காரங்க முன்னாடி அந்த பெட்டிய உடைச்சிருக்காங்க.
கடைசியா இரும்புப் பெட்டிய உடைச்சிப் பார்த்தா புதையல் இருக்கும்னு நம்பிக்கையோட இருந்தவங்களுக்கு பெரிய ஷாக்.. உள்ள உருந்தது என்னவோ, பழையகால சுதேசமித்திரன் பேப்பர் ஒண்ணும், 3 ரூபா 50 காசு சில்லறையும்தான்.
இப்ப அந்த புதையல் ஆசை புஷ்வானமாகிப் போக, வதந்திக்கும் முற்றுப்புள்ளி விழுந்துருக்கு… உடைக்கப்பட்ட இரும்பு பெட்டிய பழையபடியும் மசூதி நிர்வாகிகள்கிட்ட ஒப்படைக்கப்படும்னு வருவாய்துறையினர் தெரிவிச்சிருக்காங்க…
ஹூம்… இல்லாத புதையலுக்கு எத்தன அக்கப்போரு!
Discussion about this post