கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல்

சென்னை நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர் நிலைகளில், தற்போது 3 மடங்கு நீர் இருப்பு உள்ளதால், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு நாளொன்றுக்கு 83 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி உள்ளிட்ட ஏரிகள் மற்றும் வீராணம் திட்டம், கிருஷ்ணா கால்வாய் திட்டம் மூலம் சென்னை நகரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்ததை விட, இந்த ஆண்டு சென்னை ஏரிகளில் நீர் இருப்பு அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டை விட நீர் இருப்பு 3 மடங்கு அதிகமாக இருப்பதாலும், கிருஷ்ணா நதி நீரும் சில நாட்களில் தமிழகம் வந்தடையும் என்பதால், கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version