செங்கல்பட்டு மாவட்ட தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு

செங்கல்பட்டு புதிய மாவட்ட தொடக்க விழா பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு புதிய மாவட்ட தொடக்க விழா வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைய உள்ள இடம், அலங்கார நுழைவு வாயில், சாலை அமைத்தல் போன்ற தொடக்க விழா பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

இதனை வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். புதிய மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா ஆகியோரிடம் விழா ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

Exit mobile version