பணப்பட்டுவாடாவை தடுக்க ரயிலில் தேர்தல் பறக்கும்படை சோதனை

பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் காரைக்குடியில் ரயில் பயணிகளிடம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது மற்றும் வேறு முறையற்ற செயல்களில் பணத்தை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் அடங்கிய பறக்கும் படையினர் அனைத்து இடங்களிலும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடுமையான சோதனையின் எதிரொலியால், ரயில்களில் பணம் கடத்தப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சந்திப்பில் ரயில்வே காவல் ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் ரயில்வே காவல்துறை குழுவினர் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரைக்குடியில் இருந்து விருதுநகர் சென்ற ரயிலில் பயணிகளின் உடமைகளை தீவிரமாக சோதனை செய்யப்பட்டது.

 

Exit mobile version