விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணிக்கும் அதிகாரிகளை நியமனம் செய்து, பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
12 ஆம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி வரும் 27ம் தேதி தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடைத்தாள் திருத்தும் மையங்களை, கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணிக்க, அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்கள், 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 5 இணை இயக்குநர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணியையும் மேற்பார்வையிடுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.