திமுக பிரமுகருக்குச் சொந்தமான நூற்பாலையில் அதிகாரிகள் சோதனை

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் வழங்கி, பிரியாணி விருந்து அளிப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, நூற்பாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சித் தலைவருக்கு திமுக நிர்வாகி சுந்தரவடிவேல் என்பவரின் மனைவி வளர்மதி போட்டியிடுகிறார். இந்த நிலையில், வளர்மதியின் உறவினருக்குச் சொந்தமான நூற்பாலையில், வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்படுவதாகவும், பிரியாணி விருந்து அளிக்கப்படுவதாகவும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், நூற்பாலையில் அதிரடியாகச் சோதனை நடத்தினர். அப்போது, நூற்பாலை உரிமையாளர் தனது மகளின் பிறந்தநாளையொட்டி, விருந்து நடைபெறுவதாகக் கூறினார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் விருந்து நடத்தக் கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சாப்பிட வந்தவர்கள் அங்கிருந்து வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர். இதனிடையே, வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் வழங்கினார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version