கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட தங்கும் விடுதிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு பூட்டி சீல் வைக்க கடந்த பிப்ரவரி மாதம் உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி நகராட்சி ஆணையாளர் முருகேசன் தலைமையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அனுமதி மீறி செயல்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். இந்நிலையில், உத்தரவை மீறி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில், பின் வாசல் வழியாக சுற்றுலாப்பயணிகளுக்கு அதிக வாடகைக்கு விடுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைத்ததுடன் குடிநீர் இணைப்பையும் துண்டித்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.