முறையான அனுமதி பெறாமல் இயங்கிய தனியார் பள்ளிக்கு சீல் வைத்த அதிகாரிகள்

திருவெறும்பூர் அருகே முறையான அனுமதியின்றி இயங்கிய தனியார் பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டையில் கடந்த 3 ஆண்டுகளாக இயங்கிவந்த தனியார் பள்ளியில் எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். இதனிடையே அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்ததால் இந்த பள்ளியை சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வருவாய் துறையினர் ஆகியோர் தனியார் பள்ளிக்கு சென்று சீல் வைக்க முயன்றனர். அப்போது பள்ளிக்கு சீல் வைக்க பள்ளி தாளாளர் சாருமதி எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல்துறையினரின் உதவியுடன் அந்த பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Exit mobile version