குழந்தைகளின் ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தால் குற்றம் என்ற போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக, காவல்துறை கூடுதல் இயக்குநர் ரவி தெரிவித்துள்ளார்.சென்னையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி, பேரணி நடைபெற்றது. இதனை சென்னை காவல்துறை கூடுதல் இயக்குநர் ரவி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், செல்போனில் குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருந்ததாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 2 ஆயிரம் பேர் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். குழந்தைகளின் ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தால் குற்றம் என்ற போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஆபாச படங்களை யாராவது அனுப்பினால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என கூறினார்.