அமெரிக்க விமான நிலைய கணினிகளில் திடீர் கோளாறு

அமெரிக்கா விமான நிலையங்களில் கணினிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயணிகளின் ஆவணங்களை சோதிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.

அமெரிக்க நாட்டில் விமான நிலையங்கள், சுங்கத்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளின் பணி, கணினிகளை மையப்படுத்தியே இயங்கி வருகிறது. இந்த நிலையில் சுங்கத்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளின் கணினிகள் திடீரென செயலிழந்தன. இதனால், பயணிகளின் ஆவணங்களை சோதிப்பதில் தாமதம் ஏற்பட்டது. சர்வதேச முனையங்களில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகினர். சில இடங்களில் கணினிகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ள நிலையில் நிலைமை படிப்படியாக சீரடைந்து வருகிறது.

Exit mobile version