43 நாட்களுக்கு பிறகு சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியில் இருந்து 119 புள்ளி 74 அடியாக குறைந்துள்ளது.
கடந்த சில தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினால், 120 அடி முழு கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணை நடப்பாண்டில் நான்காவது முறையாக நிரம்பியது. தொடர்ந்து 43 நாட்கள் தனது முழு கொள்ளளவில் இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 119 புள்ளி 74 அடியாக சரிந்துள்ளது. காலை நிலவரப்படி அணையின் நீர்வரத்து 3 ஆயிரத்து 939 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 119 புள்ளி 74 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93 புள்ளி 57 டி.எம்.சியாகவும் உள்ளது. டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது.