தமிழக அரசின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது

அந்தியூரில் அரசு சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்…

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக அரசின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் அந்தியூர் வட்டாரத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 34-தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியுள்ள நபர்களை தங்கள் நிறுவனத்திற்கு தேர்ந்தெடுத்தனர். மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமை தங்கள் பகுதியில் தேடி வந்து நடத்திய தமிழக அரசிற்கு இளைஞர்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

Exit mobile version