புதுச்சேரியில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 27ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியுரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.
புதுச்சேரியில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் 27ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும் இந்த விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பல்கலைக்கழக மாணவ மாணவிகளுக்குப் பட்டங்களையும், தங்கப் பதக்கங்களையும் வழங்கி விழாவில் சிறப்புரையாற்றினார். இதனையடுத்து, இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்க இருக்கும் குடியரசுத்தலைவர் நாளை ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் செல்கிறார். அங்கிருந்து அவர் திருநள்ளாறு சென்று சனி பகவானை தரிசித்துவிட்டு சென்னைக்கு வர இருக்கிறார். குடியரசு தலைவர் வருகையை அடுத்து புதுச்சேரியில் காவல்துறையினரால் 5 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.