சிறுவனின் வயிற்றின் ரத்தக்குழாயிலிருந்த கட்டியை அகற்றி சாதனை

16 வயது சிறுவனின் வயிற்றின் ரத்தக் குழாயிலிருந்த கட்டியை அகற்றி ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் கௌரிசங்கர் வயிற்றுவலி காரணமாக கடந்த மாதம் 10ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கௌரிசங்கருக்கு வயிற்றில் உள்ள முக்கியமான ரத்தக்குழாயில் பந்து போன்ற அளவில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து கடந்த 30ம் தேதி மருத்துவர் ஜோசப் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 5 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் கட்டியை அகற்றி செயற்கை ரத்த குழாயை வெற்றிகரமாக பொருத்தினார்கள். தற்போது சிறுவன் நலமுடன் இருப்பதாகவும், அவனுக்கு வருங்காலத்தில் எவ்வித பிரச்சனையும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version