கிராம மக்கள் முன்னேற்றமே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் என்பதால் அரிமா அமைப்புகள் கிராம மக்களுக்கு அதிக அளவில் உதவ வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.
அரிமா அமைப்பின் 47வது தெற்காசிய மாநாடு சென்னை கிண்டியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும், ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த, தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார். வீடு இல்லாமல் இருக்கும் 12 லட்சம் ஏழைகள் கணக்கெடுக்கப்பட்டுஅதில் 6 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். கிராம மக்கள் முன்னேற்றமே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் என்பதால் அரிமா அமைப்புகள் கிராம மக்களுக்கு அதிக அளவில் உதவ முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.