அறிவியல் தொழில்நுட்பத்தின் ஆர்வத்தை மாணவர்களிடம் தூண்ட வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த குன்னம் பகுதியில், தனியார் தொழில்நுட்ப கல்லூரியில், மாணவர்களால்
வடிவமைக்கப்பட்ட வானிலையை கண்காணிப்பதற்கான மூன்று கேன்சாட் செயற்கைக்கோள்களை ஏவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துக்கொண்டார். செயற்கைகோள் இயங்கும் முறை, ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள் பிரிந்து தரையிறங்கும் தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இஸ்ரேல் சிறிய நாடாக இருந்தாலும், அந்நாட்டு மாணவர்கள் ராக்கெட் தொழில்நுட்பத்தில் பல்வேறு சாதனைகளை நடத்தி வருவதாக தெரிவித்தார். இந்திய மாணவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கினால்தான் அடுத்த தலைமுறை மாணவர்களால் சிறப்பாக வரமுடியும் என அவர் குறிப்பிட்டார்.