முள்ளங்கி கிழங்கின் விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

முள்ளங்கி கிழங்கின் விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள நாகையகவுண்டன்பட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. நல்ல விளைச்சல் கண்டுள்ள நிலையில் தற்போது அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து முள்ளங்கி கிழங்குகள் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலுள்ள சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஒரு மூட்டை 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் விலை கட்டுப்படியாகவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஒரு மூடை 500 ரூபாய் என அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version