புகழ் பெற்ற மனிதர்களின் மெழுகு சிலை கண்காட்சி கூடம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புகழ் பெற்ற மனிதர்களின் மெழுகு சிலை கண்காட்சிக் கூடத்தை, சிற்பக் கலைஞர் சுனில் கண்டலூர் உருவாக்கியுள்ளார்.

உலகிலேயே புகழ் பெற்ற மனிதர்களின் மெழுகு சிலை கண்காட்சி கூடம் லண்டனில் மட்டுமே உள்ளது. இந்த வரலாற்று பதிவை மாற்றும் விதமாக, கேரளாவைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் சுனில் கண்டலூர், திருவனந்தபுரத்தில் மெழுகு சிலைகளின் கண்காட்சி கூடத்தை தொடங்கியுள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தீம் பூங்காவில் இவர் உருவாக்கிய அன்னை தெரசா, அப்துல்கலாம் ஆகியோரின் மெழுகு சிலைகள் நிஜ தேற்றத்தை காட்டுவதாவே உள்ளது. அரசியல், சினிமா, விளையாட்டு என பலது றைகளில் புகழ் பெற்றவர்களை, தத்துரூபாமாக சிற்ப கலைஞர் சுனில் உருவாக்கியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், மகத்மா காந்தி, நேரு, இந்திராகாந்தி, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கேரள முதல்வர் அச்சுதானந்தன், விமானப்படை விங் கமாண்டர் அபினந்தன், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் முழு உருவங்களை மெழுகுச் சிலையாக வடித்துள்ள சனில், அவர்களை நேரடியாக பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

சினிமா துறையில் புகழ் பெற்ற ரஜினிகாந்த், மோகன்லால், கிரிக்கெட் வீரர் விராட் கோலி போன்ற வாழும் மனிதர்களின் மெழுகுச் சிலைகளை, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கின்றனர். மெழுகுச் சிலைகள், சிற்பி சுனில் கண்டலூரின் கலைத்திறனை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.

 

Exit mobile version