உள்ளாட்சி அமைப்புகளின் 484 சாலைகளை சீரமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் 484 சாலைகளை சீரமைக்க தமிழக அரசு 895 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது…

தமிழகம் முழுவதும் சேதமடைந்த சாலைகளை தமிழக அரசு மேம்படுத்தி வருகிறது. அதன்படி, 27 மாவட்டங்களில் சுமார் ஆயிரத்து 267 கிலோ, மீட்டர் தூரத்திற்கு சாலைகளை விரிவாக்கம் செய்யவும் , சீரமைப்பு பணிகளுக்காகவும் தமிழக அரசு 895 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் படி தமிழக முழுவதும் உள்ள சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு, விபத்தில்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி தமிழகம் செல்லவுள்ளது. மேலும் சாலை கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதாரம் உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version