நிலவின் தரை பகுதியில் மின்காந்த துகள்கள் இருப்பதை, சந்திரயான் – 2 விண்கலத்தின், ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளதாக, ‘இஸ்ரோ’ தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வு மையமான, இஸ்ரோ ஜூலை, 22ல், சந்திரயான் – 2 விண்கலத்தை, விண்ணில் ஏவியது. இதன் சுற்று வட்டப்பாதை அதிகரிக்கப்பட்டு, நிலவை நெருங்கிய நிலையில் 2 புள்ளி 1 கிலோ மீட்டர் தொலைவில், விக்ரம்லேண்டர்’ கருவியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டர் கருவி, நிலவில் வேகமாக தரையிறங்கி இருக்கக் கூடும் என்றும், அதனால், நிலவின் தரைப் பகுதியில் மோதி, செயல் இழந்திருக்கலாம் என்றும், விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சந்திரயான் – 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவை சுற்றி வருகிறது. அதன் செயல்பாடுகளும் திருப்தியாக உள்ளதாக, இஸ்ரோ தெரிவித்த நிலையில், நிலவின் தரை பகுதியில், மின்காந்த துகள்கள் இருப்பதை, ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரோவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.