'கைலாசா' என்ற நாட்டை உருவாக்கி தனி சாம்ராஜ்யம் நடத்தும் நித்தியானந்தா

தனித்தீவை விலைக்கு வாங்கிய நித்தியானந்தா, இந்துக்களுக்கென தனிநாடு, கொடி, பாஸ்போர்ட் போன்றவற்றை உருவாக்கி, தனக்கென தனி ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.

பாலியல் துன்புறுத்தல், பெண் குழந்தைகள் கடத்தல் என அடுக்கடுக்கான புகார்களில் சிக்கியுள்ள நித்தியானந்தா, தலைமறைவாக இருந்து வருகிறார். நேபாளம் வழியாக இந்தியாவை விட்டு தப்பி சென்று, ஈக்வடார் அருகே தனித்தீவு ஒன்றை நித்தியானந்தா விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த தீவுக்கு ‘நித்தியானந்தா கைலாஷா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அண்மையில் நித்தியானந்தா வெளியிட்ட வீடியோ பிரசங்கத்தில், தனிநாடு உருவாக்கி உள்ளதாகவும், இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் கைலாசா நாட்டின் குடிமகனாக ஆகலாம் என தெரிவித்துள்ளார். கைலாசா நாட்டின் தற்போதைய மொத்த மக்கள் தொகை 10 கோடி எனவும், இந்த நாட்டுக்கென்று தனி கொடி, பாஸ்போர்ட், மொழி ஆகியவற்றையும் நித்தியானந்தா உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த இந்து நாட்டிற்கு, நித்தியானந்தா பிரதமராகவும், 10 பேர் கொண்ட அமைச்சரவையை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த தனி நாட்டிற்கு உரிய அந்தஸ்து கிடைக்க ஐ.நா.சபையை நாட நித்தியானந்தா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version