ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது

ரிக்டர் அளவில் 6 புள்ளி 8 ஆக பதிவான நிலநடுக்கத்தினால் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.  நொய்டா, காஜியாபாத், க்ரேட்டர் நொய்டா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள் அதிர்ந்தன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். எனினும் நிலநடுகத்தினால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version