அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, மைக்ரோ சாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மாஸ்க் ஆகியோரது ட்விட்டர் கணக்குகளையும், ஹேக்கர்கள் முடக்கினர். முடக்கப்பட்ட ட்விட்டர் பக்கத்தில், பிட்காயினுக்கு விளம்பரம் செய்யும் வகையில் பதிவிடப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக தம்மிடம் உள்ள அனைத்தையும் சமூகத்துக்கு வழங்க உள்ளதாகவும், தமது முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ள பிட்காயின்களை, இரு மடங்காக திரும்ப அனுப்ப உள்ளதாகவும் ஒபாமாவில் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேக்கர்களின் கைவரிசை குறித்து, ட்விட்டர் நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சே, ட்விட்டருக்கு இது கடினமான நாள் என்றும், இதை எண்ணி வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.