போடி நாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 11 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார்.
போடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 99 ஆயிரத்து 804 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை விட 11 ஆயிரத்து 55 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.
திமுகவின் தங்க தமிழ்ச்செல்வன் 88 ஆயிரத்து 749 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
இந்த நிலையில், தேர்தல் வெற்றி சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.
போடி தொகுதியில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஹாட்ரிக் வெற்றியை பதிவுச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி உதயகுமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் மணிமாறனை விட 14 ஆயிரத்து 137 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார்.
அதிமுகவின் ஆர்.பி உதயகுமார் 1 லட்சத்து 338 வாக்குகளும், திமுகவின் மணிமாறன் 86 ஆயிரத்து 251 வாக்குகளும் பெற்றனர்.