கருப்பு பூஞ்சை நோயை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தல்

கருப்பு பூஞ்சை நோயை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கவேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டகாலிலே படும் என்பதற்கேற்ப கொரோனா தொற்றிலிருந்து குணமடையும் நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கருப்பு பூஞ்சை தொற்றுக்கான ஒரு டோஸ் மருந்து பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருந்து இல்லாததால், பாதிக்கப்பட்டவர்கள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்படுவதாக, மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் தெரிவித்திருப்பது நாளிதழில் செய்தியாக வந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின்-பி (Amphotericin-B) மருந்துகளை தேவையான அளவு இருப்பு வைக்கவேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இந்தநோயை முதலமைச்சரின் வரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version