திருமலை உள்ள ஏழுமலையான் கோயிலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.
ஆந்திர மாநிலம், திருமலைக்கு நேற்று மாலை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். அங்கு உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர் இன்று காலை ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்க நாயக்கர் மண்டபத்தில், கோயில் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கினர். கோயிலின் எதிரே உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு சென்று துணை முதலமைச்சர் வழிபாடு நடத்தினார்.