பத்திரப்பதிவு கட்டணத்தை குறைப்பது குறித்து, முதலமைச்சருடன் கலந்து பேசி, நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் தனியார் நிறுவனத்தின் சார்பில் புதிதாக துவக்கப்பட்டுள்ள கிளப் ஹவுஸ் திறப்பு விழாவில், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக துணை முதலமைச்சர், ரியல் எஸ்டேட் கட்டுமான துறையில், வீடுகள் கட்டுவதற்கு உரிய அனுமதிகள் வழங்க, ஒற்றை சாளர முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதேபோல், வீட்டு வசதி வாரியம் மூலம் தனியாருக்கு நிகராக அடுக்குமாடி குடியிடுப்பு வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது எனவும் கூறினார். மேலும், பத்திரப்பதிவு கட்டணத்தை குறைப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துணை முதலமைச்சர் தெரிவித்தார்.
Discussion about this post