6 மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

மக்களவை தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணி குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தநிலையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க. கட்சிகளிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது புதிய தமிழகம் கட்சியும் அதிமுகவில் இணைந்துள்ளது.

அதனடிப்படையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.விற்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிக்கும் என்றும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், மூத்த நிர்வாகிகள் மற்றும் 6 மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Exit mobile version