தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் நூற்றுக்கு 25 விழுக்காடு குழந்தைகளும், வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லாமல் 100 க்கு 22 விழுக்காடு குழுந்தைகளும் இருப்பதாக மத்திய குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 25 சதவீத குழந்தைகள் வயதுக்கு ஏற்ற உடல் வளர்ச்சி இல்லாமலும், 22 சதவீத குழந்தைகள் வயதுக்கு ஏற்ற எடை இல்லாமலும் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுபோன்று, ஊட்டச்சத்து குறைபாட்டாலும், வயதுக்கு ஏற்ற எடை இல்லாமலும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் உணவு பழக்க வழக்கங்கள் தான் என மத்திய குடும்ப நலத்துறை பட்டியலிட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் அரிசி, கோதுமை சார்ந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் உட்கொள்வதாலும், காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் போன்ற சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகள் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. குழந்தைகளுக்கு சத்தான உணவு வகைகளையும், ஆரோக்கியமான உணவு வகைகளையும் கொடுப்பதில் பெற்றோர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்ததே இதற்கு காரணம் என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர்.
கருவுறும் பெண்கள் தொடர்ந்து 10 மாதங்களுக்கு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு பழக்கவழக்கங்களை முறையாக கடைப்பிடிப்பது அவசியம் என்றும், குழந்தை பிறப்புக்கு பிறகும் சத்தான, ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடுவதன் மூலமே ஆரோக்கியமான, சத்தான குழந்தைகளை வளர்தெடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்.
தமிழகத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் மற்றும் மத்திய அரசின் இந்த ஆய்வறிக்கையை தமிழக பொது சுகாதார துறை இயக்குனரகம் ஒப்புக் கொண்டுள்ளது. ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்குவதற்காக தான் தமிழக அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு திட்டம் செயல்படுத்துவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடியா அரசின் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தில், பயன்பெறுபவர்கள் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தான் என்றும், அதிலும் காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தில் கீரை, காய்கறிகள், பழ வகைகள், சிறுதானியங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதில்லை என்ற விவரம் கூட தெரியாமல் இருப்பது தான் தமிழக சுகாதாரத்துறை இயக்குனரின் லட்சணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்…
காலை சிற்றுண்டியின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு சத்தாண உணவு அளிப்பதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் தவறான தகவலை வெளியிட்டிருப்பதோடு, ஊட்டச்சத்து குறைப்பாடு உள்ள குழந்தைகள் விகிதத்தை எப்படி குறைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
Discussion about this post