ஒப்பந்த செவிலியர்களை போலீசார் வலுகட்டாயமாக வெளியேற்றியதால் பரபரப்பு

பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்களை போலீசார் இரவோடு இரவாக வலுகட்டாயமாக வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சுகாதாரத் துறையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் 3 ஆயிரத்து 485 செவிலியர்களை பணி நிரந்தம் செய்வதாக தேர்தல் நேரத்தில் திமுக வாக்குறுதி அளித்தது.

ஆட்சிக்கு வந்த பிறகு, வழக்கம் போல் அரசியல் நாடகத்தை அரங்கேற்றிய திமுக, ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்திரம் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

திமுக அரசின் இந்த மெத்தன போக்கை கண்டித்து, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். அலுவலகத்தில் ஒப்பந்த செவிலியர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இரண்டு கட்டமாக நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததால், உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்தது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று செவிலியர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version