பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில், இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் யாரும் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு, மீனவளத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, புயலாக உருவாகியுள்ளது. இந்தப் புயலுக்கு புல்புல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மேற்குவங்கம் நோக்கி நகரத் தொடங்கியிருப்பதால், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல் நாகை துறைமுகத்திலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் வலுப்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, கடல் சீற்றமாகவே காணப்படுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரி துறைமுகத்திலும் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version