இந்தியாவில் ஊட்டசத்து குறைபாடு கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவு : ஐநா!!

இந்தியாவில் ஊட்டசத்து குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த 13 ஆண்டுகளில், 6 கோடி குறைந்து 14 சதவீதமாக உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

சர்வதேச உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து அறிக்கையை ஐ.நா வெளியிட்டுள்ளது. அதில் 2004ம் ஆண்டு முதல் 2006 வரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 21 புள்ளி 7 சதவீதம் பேர் ஊட்டசத்து குறைபாடு கொண்டவர்களாக இருந்ததாகவும், இது 2017 முதல் 2019ம் ஆண்டுகளில் 14 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் ஊட்டசத்து குறைபாடு கொண்டவர்கள் எண்ணிக்கை சுமார் 6 கோடியாக குறைந்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. நாட்டில் ஒட்டுமொத்தமாக 18 புள்ளி 92 கோடி பேர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளதாகவும், நாட்டில் உள்ள சிறுவர்களில் சிலரே வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளர் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.

Exit mobile version