தெலுங்கினத்தின் உண்மையான அடையாளமாக என்.டி.ராமாராவ் திகழ்ந்தார்-பிரதமர் மோடி

தெலுங்கினத்தின் உண்மையான அடையாளமாக என்.டி.ராமாராவ் திகழ்ந்ததாகவும், ஆந்திராவில் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் இரண்டாவது முறையாக அவரை முதுகில் குத்துவிட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆந்திரா மாநிலத்தின் அனந்தப்பூர், கடப்பா, கர்னூல் , நரசராவ்பேட்டை மற்றும் திருப்பதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன் காணோலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, தெலுங்கினத்தின் உண்மையான அடையாளமாக என்.டி. ராமராவ் திகழ்ந்ததாக தெரிவித்தார். தெலுங்கு மக்களின் நலன்களை புறக்கணித்த காங்கிரஸ் கட்சியை அவர் மன்னித்ததே இல்லை என்றும் குறிப்பிட்டார். ஆந்திராவில் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக ஆந்திர மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் என்.டி.ராமாராவை இரண்டாவது முறையாக முதுகில் குத்திவிட்டதாகவும் மோடி விமர்சித்தார்.

Exit mobile version