உத்திரகாண்ட் மற்றும் உத்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான என்.டி திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவருடைய மனைவி அபூர்வா கைது செய்யப்பட்டுள்ளார்
ரோகித் சேகர் திவாரி கடந்த மாதம் 16 ஆம் தேதி டெல்லியில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து பிரேத பரிசோதனையில் அவரது கழுத்து நெறிக்கப்பட்டு மூச்சுச் திணறி இறந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ரோகித் சேகர் திவாரி வீட்டில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர். இதில் அவருடைய மனைவி அபூர்வாவே, ரோகித் சேகர் திவாரியை கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்தி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.