மே 21ல் குரூப் 2 & குரூப் 2 ஏ தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள், மே மாதம் 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

குரூப் 2 பிரிவில் 116 காலிபணியிடங்கள்; குரூப் 2ஏ பிரிவில் 5,413 காலிபணியிடங்கள்; 23ஆம் தேதி தேர்வு அறிவிக்கை

குரூப் 2 தேர்வுக்கு வரும் 23ம் தேதி தொடங்கி மார்ச் 23ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மார்ச் 23ம் தேதி கடைசிநாள் – டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன்

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு ’’மே 21ம் தேதி’ நடைபெறும்; ஜூன் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்

200 மதிப்பெண்களுக்கு நடைபெறும் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு தமிழ் மொழியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு எழுத 9 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்ப்பு

Exit mobile version