சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு சாரதா நிதி நிறுவனம் துவங்கப்பட்டது. இந்நிலையில், வாடிக்கையாளர்களிடம் பல்லாயிரம் கோடி ரூபாயை திரட்டி, திருப்பி தராமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், சாரதா நிதி மோசடி வழக்கு விசாரணையில் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாக சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 8ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.