குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு நோட்டீஸ் : தமிழக டிஜிபி விளக்கம்

குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7 ஆயிரத்து 324 காவல்துறை அதிகாரிகளுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். குற்ற வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2009 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் முடித்து வைக்கப்பட்ட எப்.ஐ.ஆர்-களின் எண்ணிக்கை குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7 ஆயிரத்து 324 காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். மேலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் தேதியை குறிப்பிடுவதற்கு என்று விசாரணை நீதிமன்றங்களில் தனி பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் எனவும் டிஜிபி யோசனை தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version