காஞ்சிபுரம் அத்திவரதரை இன்று முதல் பக்தர்கள் இலவசமாக தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தரிசனம் வழங்கும் அத்திவரதர் வைபவம் நேற்று காலை துவங்கியது. தைலகாப்பு பூசப்பட்டு ஆகஸ்ட் 17ம் தேதி வரை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு அவர் காட்சியளிக்கிறார். ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அத்தி வரதரை தரிசித்து சென்றனர். முதல் நாளில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாலையில், கூட்ட நெரிசல் அதிகமானதால் பொதுமக்கள் சுவாசம் விட கூட முடியாமல் சிரமப்பட்டனர். இதில், மூவர் மயக்கமடைந்த நிலையில், கோயிலின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமிற்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் 50 ரூபாய் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்