ஏ.ஆர் ரஹ்மானின் சுயசரிதை புத்தகம் வெளியீடு – NOTES OF A DREAM

தற்கொலைக்கு தூண்டும் அளவிலான கஷ்டங்களை எதிர்கொண்டதால் தான், எதற்கும் அஞ்சாத மனிதனாக மாறியுள்ளதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
NOTES OF A DREAM என்ற தலைப்பில் ஏ.ஆர் ரஹ்மானின் சுயசரிதை புத்தகம் மும்பையில் வெளியிடப்பட்டது. பிரபல எழுத்தாளர் கிருஷ்ணா திரிலோக் எழுதிய இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஏ.ஆர் ரஹ்மான், தனது வாழ்கை பயணத்தின் உறுக்கமான நினைவுகளை பதிவு செய்தார்.

தனது 25 வயது வரை வாழ்கையை முற்றிலும் வெறுத்ததாக குறிப்பிட்ட அவர், தற்கொலை செய்யும் அளவிற்கு மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறினார். ஆனால் தனக்கு வந்த துன்பங்களை எதிர்கொண்டதால் மட்டுமே தற்போது உலகம் அறியும் ஒரு மனிதனாக இருப்பதாக அவர் கூறினார். புது மனிதனாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் திலீப் குமார் என்ற தனது பெயரை ரஹ்மான் என மாற்றியதாக தெரிவித்த அவர், இதனால் தான் தாம் இஸ்லாமியத்தில் இணைந்ததாகவும் கூறினார்.

 

 

 

Exit mobile version