வேலூர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற வடமாநில கொள்ளையனை, பொது மக்கள் பிடித்து காவல் துறையில் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஜலால் பள்ளம் பகுதியை சேர்ந்த அலி என்பவர் பேக்கரி கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், அவருடைய வீட்டில் நுழைந்த வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், வீட்டில் இருந்த பெண்களை தாக்கிவிட்டு, பணம் நகையை கொள்ளையடிக்க முற்பட்டுள்ளார். பெண்களின் கூச்சலை கேட்டு அப்பகுதியினர் ஒன்று சேர்ந்து அந்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் பப்லு என்பதும் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.