கோவையில் வட மாநில கும்பல் ஒன்று நூதன செல்போன் விற்பனை செய்து மக்களை ஏமாற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது.
துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் தனியாக நின்று கொண்டு இருக்கும் நபர்களை நோட்டமிடும் வடமாநில இளைஞர்கள் போலியான ரசீது மற்றும் ஆவணங்கள் மூலம் போலி மொபைல் போன்களை அங்கீகரிக்கப்பட்ட போன்கள் எனக் கூறி ஏமாற்றி விற்பனை செய்து வருகின்றனர். புதியது போலவே தோற்றமளிக்கும் போலி மொபைல் போன்களுக்கு போலீயான ரசீது மற்றும் ஆவணங்கள் தயார் செய்யும் வட மாநில இளைஞர்கள் அதனை அவசர தேவைக்காக விற்பதாக கூறி மக்களை ஏமாற்றி வருவது கோவை பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.