வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திரக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனால், வட தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மன்னார் வளைகுடாவில், 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், வட தமிழகம், தெற்கு ஆந்திரக் கரையோரத்திலும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது.